கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
கூடலூர்
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 1,600 மாணவர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கூறும்போது, மாணவர்கள் பள்ளிக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பும்போது சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை மீறும்போது சட்டம் சார்ந்த சிக்கல்கள், மற்றும் தனிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெள்ள தங்கம் கூறும்போது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நடவடிக்கைகள், நற்பண்புகளை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து இந்திய நாட்டின் பாதுகாப்பு துறையில் பணியாற்ற விரும்பும் 12-ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 80 பேருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். ஆசிரியர் சகாதேவன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் காவலர் முஹம்மது யாசின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.