சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர்

மன்னார்குடியில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். வட்டாரப்போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜ்குமார், மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்கிராஸ் மண்டல ஓருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்டோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். தேரடியில் தொடங்கிய ஊர்வலம் பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் ரமேஷ் மற்றும் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story