தர்மபுரி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா


தர்மபுரி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தர்மபுரி மண்டலம் சார்பில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழா தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேலாளர்கள் மோகன்குமார், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. விழாவில் தர்மபுரி புறநகர் கிளை மேலாளர் சுதாகர், நகர கிளை மேலாளர் செல்வராஜ் மற்றும் மேற்பார்வையாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், பயிற்சி டிரைவர்கள் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனர்.


Next Story