சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
விருதுநகரில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் கலெகடர் அலுவலகத்தில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், குழு உறுப்பினர் அழகுசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க வேண்டும். ெரயில்வே பீடர் சாலையை சீரமைக்க வேண்டும். விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிபுகளை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story