சாலைபாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பஸ்


சாலைபாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பஸ்
x

ராணிப்பேட்டையில் சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

சாலைபாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 11- தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்ட பஸ்சை பார்வையிட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கவனக்குறைவு மற்றும் விதிமீறல்களால் வாகன ஓட்டுனர்கள் ஏற்படுத்தும் சாலை விபத்துக்கள் குறித்த குறும்படத்தினை திரையிட்டு பொதுமக்களுக்கு காட்டப்படும் சிறிய வாகனத்தையும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஸ்டிக்கர்

பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கரை ஒட்டினார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டு வேலன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் அன்பு மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story