சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:04+05:30)

வேதாரண்யத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

இதேபோல் வேதாரண்யம் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜீவராஜா மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் மதன் குமார், சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலம் வேதாரண்யம் தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை அடைந்தது.. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை கையில் ஏந்தி சென்றனர்


Next Story