அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு சாலை அமைப்பு


அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு சாலை அமைப்பு
x

வடகோவனூரில், அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள வளாகத்திலேயே ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம், நூலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது. இதனால், மழை காலங்களில் இந்த மண் சாலை சேறும்-சகதியுமாக மாறி விடும். இதனால், இந்த அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

சாலை அமைப்பு

இதனால், இந்த பகுதிக்கு செல்லும் மண்சாலையை சிமெண்டு சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து `தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக இந்த மண் சாலை, சிமெண்டு சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Next Story