சாலையை தோண்டி தரத்தை ஆய்வு செய்த ஆணையாளர்
சாலையை தோண்டி தரத்தை ஆய்வு செய்த ஆணையாளர்
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். சாலை பணிகள், கட்டிட பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.
50-வது வார்டுக்கு உட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நலவாழ்வு மையம், 21-வது வார்டு குமரன் பூங்கா, 43-வது வார்டு ஆலங்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
27-வது வார்டு குமார் நகர் மற்றும் 1-வது வார்டு அங்கேரிப்பாளையம் பகுதிகளில் நடந்து வரும் சாலைப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். சாலையை தோண்டிப்பார்த்து ஆணையாளர் தரத்தை ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க அறிவுறுத்தினார்.