சாலை விரிவாக்க பணி: கூட்டுக்குடிநீர் குழாய்கள் அகற்றம்
கூடலூர் நகரில் சாலை விரிவாக்க பணி காரணமாக கூட்டுக்குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டன
தேனி
கூடலூர் நகரப் பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கூடலூர்-தேசிய நெடுஞ்சாலையில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கூடலூர் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக்குடிநீர் குழாய் அகற்றப்பட்டு பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்கிடையே கூடலூர் நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் செய்ய காலதாமதமாகும் நிலை உள்ளது. எனவே கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story