ஆமைவேக சாலை பணியால் திண்டாடும் பொதுமக்கள்


ஆமைவேக சாலை பணியால் திண்டாடும் பொதுமக்கள்
x

ஆமைவேக சாலை பணியால் திண்டாடும் பொதுமக்கள்

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் பல்லடம் ரோடு அருகே புதுத்தோட்டம் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை கடந்த காலங்களில் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த சாலையை மேம்படுத்தும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த பணி வேகமாக நடந்த நிலையில் பின்னர் பணியில் தொய்வு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பகுதியில் பணி மெதுவாக நடந்து வருகிறது. குறிப்பாக இங்கு சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சுமார் 1½ மாதங்களுக்கு மேலாகிய பின்னரும் சாலை பணி முழுமை பெறாமல் உள்ளது.

இவ்வாறு ஆமை வேகத்தில் நடந்து வரும் பணியால் மேடு, பள்ளமாக உள்ள சாலையில் செல்வதற்கு இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதில் ஆங்காங்கே பாதாள சாக்கடைக்கான மூடிகளும் திறந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் திண்டாட்டத்துடன் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். பழைய பஸ் நிலைய மேம்பாலத்தில் இருந்து செரீப் காலனிக்கு செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான வாகனங்கள் இவ்வழியாக செல்வதால் இங்கு நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?.



Related Tags :
Next Story