தியாகதுருகம் அருகே கார் மோதி சாலை பணியாளர் சாவு


தியாகதுருகம் அருகே    கார் மோதி சாலை பணியாளர் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே கார் மோதி சாலை பணியாளர் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47). கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர், தனது மொபட்டில் தியாகதுருகத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வீரசோழபுரம் பிரிவு சாலையில் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார், சிறுவல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story