சாலை பணியாளர் தற்கொலை


சாலை பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2022 1:15 AM IST (Updated: 8 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் விரக்தியில் சாலை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 48). இவர் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுதா (45), கமலவேணி (43) என 2 மனைவிகள் உள்ளனர். காளிமுத்துக்கு சுதா மூலமாக முத்துக்குமார் (23), சரவணக்குமார் (21) என்ற 2 மகன்களும், கமலவேணி மூலமாக கமலேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக காளிமுத்துவின் 2 மனைவிகளும் தங்களது மகன்களை அழைத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டனர். அவருடன், தாய் பழனியம்மாள் மட்டும் வசித்து வந்தார். மனைவிகள், மகன்கள் பிரிந்து சென்றதால் காளிமுத்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காளிமுத்து வீட்டின் அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே கழிப்பறைக்கு சென்ற காளிமுத்து வெகுநேரமாக திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் பழனியம்மாள், கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காளிமுத்து தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காளிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Next Story