சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு போராட்டம் நடத்த முடிவு
சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருச்சி
திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு வாரிசு பணி வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story