சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வேலாயுதம், நடராஜன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் டி.எஸ்.சங்கர் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். துணை செயலாளர்கள் கோபி, மான்ஸ் கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story