சாலை பணியாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பல ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்தில் கவனிப்பின்றி நிலுவையில் உள்ளன. கள ஆய்வின்போது முதல் -அமைச்சரிடம் இந்த கோரிக்கை மனு வழங்கப்பட்டது. எனவே, உடனடியாக வாரிசு பணிகள் வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். மாநில அளவில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கோட்ட செயலாளர் ரங்கநாதன், கோபி கோட்ட தலைவர் தர்மலிங்கம், கோட்ட செயலாளர் பாலமுருகன், மாநில செயலாளர் சென்னியப்பன் உள்பட கலந்து கொண்டனர்.