சாலை பணியாளர் சங்க கூட்டம்


சாலை பணியாளர் சங்க கூட்டம்
x

சாலை பணியாளர் சங்க கூட்டம்

நாகப்பட்டினம்

நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். உட்கோட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாநில செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கோட்ட செயலாளர் உதயகுமார், கோட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story