மாணவர்கள் சாலைமறியல்


மாணவர்கள் சாலைமறியல்
x

நாகமலைபுதுக்கோட்டை அருகே மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை அருகே மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மறியல்

நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் பிட் 1 மற்றும் சம்பக்குடி கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நிலையூர் கால்வாய் அருகே மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாகமலைபுதுக்கோட்டை புதுக்குளம் பிரிவு அருகே மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, மாவட்ட கவுன்சிலர் சத்தியமீனாட்சி ஜெயக்குமார் ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 3 மாதங்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story