பா.ஜ.க.வினர் சாலைமறியல்


பா.ஜ.க.வினர் சாலைமறியல்
x

பா.ஜ.க.வினர் சாலைமறியல்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல்

தி.மு.க. மாநில பேச்சாளர் சைதை சாதிக், சமீபத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் சைதை சாதிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சைதை சாதிக்கை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் நேற்றுமுன்தினம் இரவு பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ோராட்டத்திற்கு பா.ஜ.க. நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, அரசு தொடர்பு பிரிவு அறிவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாய்மேடு

வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் வேதாரண்யம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் வடக்கு வீதியில் பா.ஜ.க. நகர தலைவர் சுதாகர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட விவசாய பிரிவு பொதுச்செயலாளர் அய்யப்பன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் முரளி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டச்சேரி

திருமருகலில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story