தூத்துக்குடியில்மதுபோதையில்அரசு பஸ்சை வழிமறித்து டிரைவருக்கு அடி-உதை:2 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில்மதுபோதையில்அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை அடித்து உதைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் அரசு பஸ்சை மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி மறித்து டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்த 2 வாலிபர்கள் சிக்கினர்.
பஸ்சை வழிமறித்து தகராறு
தூத்துக்குடியை சேர்ந்தவர் பத்திரகாளிமுத்து. இவருடைய மகன் முருகேசன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே அரசு பஸ்சை ஓட்டி வந்தபோது, அங்கு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த கோல்மன் மகன் விஜய் (29), தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற ஆரோக்கிய சேவியர் மகன் வினோத் (39) ஆகிய 2 பேரும் அந்த அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் பஸ்சுக்குள் புகுந்த அவர்கள் டிரைவர் முருகேசனிடம் தகராறு செய்து, சரமாரியாக அடித்து உதைத்து கொலைமிரட்டல் விடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ெசன்றனர்.
2 பேர் சிக்கினர்
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஜய், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட விஜய் மீது ஏற்கனவே 13 வழக்குகளும், வினோத் மீது 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.