சாலைகள் தரமாக அமைக்க வேண்டும் அறிவுறுத்தல்
ரங்காபுரத்தில் சாலைகள் தரமாக அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., மேயர் அறிவுறுத்தினர்.
வேலூர்
வேலூர் ரங்காபுரம் அருகே உள்ள கிருபானந்தவாரியார் நகர் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி ரூ.39 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதனை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் சாலையை தரமானதாக அமைக்க அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி ஸ்ரீராம் நகரில் ஆய்வு செய்தனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற வேண்டும் என்றும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின் போது 2-வது மண்டலக் குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் கணேஷ்சங்கர், உதவி பொறியாளர் செல்வராஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story