மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்


மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
x

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது

திருநெல்வேலி

மேலப்பாளையம்:

எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோலியப்பா சேக் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஹனீபா, ரபீக், ரபீக்ராஜா, சிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஆசாத் நன்றி கூறினார்.


Next Story