திண்டிவனத்தில்திடீரென உள்வாங்கும் சாலைகள்வாகன ஓட்டிகள் கடும் அவதி


திண்டிவனத்தில்திடீரென உள்வாங்கும் சாலைகள்வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் திடீரென உள்வாங்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், இதற்கென தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியான முறையில் மூடப்படாமல் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழைக்கு இடையே, சாலைகள் ஆங்காங்கே திடீரென உள்வாங்கி வருகிறது. இதில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிக்கி கொள்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.


அதோடு, சாலையில் நடந்து செல்லும் மக்களும் திடீரென இந்த பள்ளங்களில் சிக்கி கொண்டு காயமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று 8-வது வார்டு அய்யாசாமி தெருவில் சென்ற ஆம்னி வேன் ஒன்று திடீரென உள்வாங்கிய பள்ளத்தில் சிக்கி கொண்டது. அதேபோல் அந்த வழியாக நடந்து சென்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் காலும், அந்த பள்ளத்தில் சிக்கி கொண்டதால், அவர் த டுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயபிரகாஷ் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், சரியான பதில் அளிக்கவில்லை. இதன் பின்னர், அங்கு பொக்லைன் எந்திரத்தில் வந்த ஒருவர், பள்ளங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியை மழைக்கு முன்பே சரியான முறையில் மேற்கொண்டு இருந்தால், இதுபோன்ற விபத்துக்கள் நடந்து இருக்காது என்று அப்பகுதி மக்கள் தொிவித்தனர்.


Next Story