முக்கண்ணாமலைப்பட்டியில் சாலையோர பள்ளம் மூடப்பட்டது


முக்கண்ணாமலைப்பட்டியில் சாலையோர பள்ளம் மூடப்பட்டது
x

முக்கண்ணாமலைப்பட்டியில் சாலையோர பள்ளம் மூடப்பட்டது

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே கா.சத்திரத்தில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் சாலையில் சக்கரான்குளக்கரையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு சாலையோரத்தில் வயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படவில்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த இடத்தை கடந்து செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைவதுடன் பீதியுடன் சென்று வந்தனர். எனவே சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு `தினத்தந்தி'யில் வெளியானது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அந்த பள்ளத்தை சரி செய்தனர். இதனையடுத்து செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலை துறையினருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story