கணக்கெடுப்பில் விடுபட்ட சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யலாம்
கணக்கெடுப்பில் விடுபட்ட சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசால் பி.எம்.எஸ். நிதி திட்டத்தின் மூலம் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டு வேதாரண்யம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்து புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பில் விடுபட்ட சாலையோர வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story