மூதாட்டியிடம், உதவி செய்வதாக கூறி 10 பவுன் நகை பறிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மூதாட்டியிடம் நூதன முறையில் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் துணிகரமாக 10 பவு்ன் நகையை பறித்து சென்றுள்ளனர்.
வாணியம்பாடி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மூதாட்டியிடம் நூதன முறையில் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் துணிகரமாக 10 பவு்ன் நகையை பறித்து சென்றுள்ளனர்.
சிகிச்சை பெற்று திரும்பினார்
வாணியம்பாடியை அடுத்த வடசேரி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 69), இவர் இன்று பிற்பகல் வாணியம்பாடி- கச்சேரி ரோட்டில் சிகிச்சைக்காக சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவர் தனது 10 பவுன் நகைகளை பையில் வைத்திருந்தார்.
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து பையை நாங்கள் தூக்கி வருகிறோம். எங்களிடம் கொடுங்கள்என வாங்கினர்.
பின்னர் இருவரும் சிறிது தூரம் கழித்து பையை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் தனது பையில் பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனை அருகில் சென்று வெகுநேரம் மர்ம நபர்களை தேடினார், அங்கு அவர்கள் இல்லாததால் அதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.
பதிவான காட்சிகள்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை எதிரே இருந்த கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிலர் மூதாட்டியிடம் வெகுநேரமாக பேசி தங்கநகைகளை பறித்து செல்லும் காட்சி பதிவாகியிருப்பதை கண்டனர்,
அதன்படி மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நகரின் பிரதான சாலையில் மூதாட்டியிடம் உதவி செய்வதுபோல் நடித்து மர்மநபர்கள் நகை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.