மதுக்கடையில் கொள்ளை முயற்சி
மதுக்கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
சிவகங்கை
காரைக்குடி,
குன்றக்குடி போலீஸ் சரகம் பாதரக்குடியில் அரசு மதுபான கடை உள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் மர்ம நபர்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த மது பானங்களை குடித்துவிட்டு மது விற்ற பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனால் லாக்கரை உடைத்து திறக்க இயலாததால் 3 புல் பாட்டில்கள், 10 குவாட்டர் பாட்டில்களை மட்டும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் கருணைதாசன் கொடுத்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story