டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி


டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
x

தஞ்சையில், சுவரில் ஓட்டை போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சையில், சுவரில் ஓட்டை போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடை

தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்பட 4 பேர் பணியாற்றி வருகிறார்கள். பாரிலும் சிலர் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கடையின் சுவரை உடைக்கும் சத்தம் கேட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுவரில் ஓட்டை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை போடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து ஓட்டை போட்டுள்ளனர். போலீசார் வந்ததும் இரும்பு கம்பிகளை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது.

மேலும் சில அடி நீளத்துக்கு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். முன்பக்கம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் பின்புறமாக வந்து சுவரை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலைவீச்சு

மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story