செல்போன் கடை ஊழியரை தாக்கி வழிப்பறி
தஞ்சை அருகே செல்போன் கடை ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
வல்லம்;
தஞ்சை அருகே செல்போன் கடை ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
தஞ்சை ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35). இவர் தஞ்சையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலையை முடித்து விட்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். ரெட்டிபாளையம் காந்தி பாலம் அருகே வந்த போது சதீஷ்குமாரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.4200-ஐ பறித்து சென்று விட்டனா்.
சிறுவன் கைது
தாக்்குதலில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.