எடப்பாடி அருகே துணிகரம்: மளிகை கடைக்காரர் வீட்டில் பணம் கொள்ளை


எடப்பாடி அருகே துணிகரம்: மளிகை கடைக்காரர் வீட்டில் பணம் கொள்ளை
x

எடப்பாடி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் பணம் கொள்ளை போனது. தான் வந்த மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்

எடப்பாடி:

மளிகைக்கடைக்காரர்

எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவருடைய மனைவி மேனகா (40). இவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்ற அதிகாலை 2 மணி அளவில் சிவகுமார், அவருடைய மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் ஏதோ ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு சிவகுமார் கண் விழித்தார். அங்கு 25 வயது வாலிபர் பீரோவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார், திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தான்.

கொள்ளை

சிவகுமார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதற்கிடையே கொள்ளை அடிக்க வந்த நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கத்தி, கடப்பாரை கம்பி உள்ளிட்டவை சிவகுமார் வீட்டின் அருகில் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், தப்பி சென்ற கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகுமார் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.26 ஆயிரத்து 500 கொள்ளை போனது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story