இரணியல் அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
இரணியல் அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்றுவிளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, இரவில் யாரோ மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ராமசாமி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story