தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை -போலீசார் விசாரணை


தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை -போலீசார் விசாரணை
x

பக்தர்களின் காணிக்கை பணம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தை நிர்வாகிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணினார்கள். இதில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் 525 பணம் இருந்தது. இந்த பணத்தை ஆலயத்தின் அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்தனர்.

இந்த நிலையில் ஆலயத்தின் பொருளாளர் பென்சன் தேவராஜ் அலுவலகத்தை திறப்பதற்கு வந்தார். அப்போது அலுவலக கதவு ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் கதவும் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் காணிக்கை பணமும் கொள்ளை போய் இருந்தது.

கள்ளச்சாவி மூலம் பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பென்சன் தேவராஜ் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story