புதூர்நாடு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன


புதூர்நாடு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன
x

பலத்த மழையால்புதூர்நாடு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே புதூர் நாடு மலை கிராமம் உள்ளது. ஜவ்வாது ்மலையின் மீது உள்ள 40 கிராமத்திற்கு செல்ல நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 20 கிலோமீட்டர் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த மலைப்பாதையில் பல வளைவுகள், குறுகிய திருப்பங்கள் உள்ளன. சமீபத்தில் மாண்டஸ் புயல் காரணமாக அதிக அளவு மழை பெய்ததில் மலையின் இடுக்குகளிலிருந்து மழைநீர் வருவதால் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. மேலும், மண் சரிவால் சாலையில் நேற்று அதிகாலை பெரிய பாறை உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் பாறையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.


Next Story