திண்டுக்கல்லில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி


திண்டுக்கல்லில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
x

திண்டுக்கல்லில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி வித்யாபார்த்தி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் நத்தம், வடமதுரை, பழனி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

போட்டிகள் வயது அடிப்படையில் 6 பிரிவுகளாகவும், ஆர்ட்ஸ்டிக், ஸ்குவடு, இன்லைன் ஆகிய சுற்றுகளாகவும் நடந்தது. போட்டிகளை திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்தது. பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதனை வித்யா பார்த்தி கல்விக்குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். இதில் விளையாட்டு வீரர்கள் சங்க தலைவர் ஞானகுரு, மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன், பாக்சிங் சங்க தலைவர் மாதவன், ரோலர் ஸ்கேட்டிங் சங்க நிர்வாகி தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story