காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேனி அல்லிநகரம் கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மகள் ராம்பிரியா (வயது 22). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவதானப்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தேவதானப்பட்டியில் வசித்தபோது ராம்பிரியாவுக்கும் அவருடைய மாமனார் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அருண்குமார் தனது மனைவியுடன் தேனி சிவராம்நகரில் குடியேறினார். கடந்த 8-ந்தேதி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராம்பிரியா தனது நைட்டியில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவருடைய உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்பிரியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story