அரூரில் மூக்கணாங்கயிறு விற்பனை மும்முரம்
தர்மபுரி
அரூர்:
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மாட்டு பொங்கல் அன்று ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அதற்கு புது கயிறுகள் அணிவித்து, பொங்கல் படைப்பது வழக்கம். இதை முன்னிட்டு அரூர் சந்தையில் மாடுகளுக்கான கயிறுகள் மற்றும் மூக்கணாங்கயிறுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. ரூ.250 முதல் ரூ.330 வரை விற்பனை செய்யப்படும் பல்வேறு வண்ணத்திலான மூங்கணாங்கயிறுகளை கால்நடை வளர்ப்போம் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் மூக்கணாங்கயிறு விற்பனை மும்முரமாக நடந்தது. இதேபோல் பொங்கல் பானை மற்றும் வண்ண பொடிகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
Next Story