காதலர் தினத்தால் ரோஜா விலை உயர்வு


காதலர் தினத்தால் ரோஜா விலை உயர்வு
x

திருப்பத்தூரில் காதலர் தினத்தால் ரோஜா விலை உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர்

காதலர் தினத்தையொட்டி திருப்பத்தூர் பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கட்டு 150 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பூ வியாபாரிகள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில் ரோஜா பூக்கள் ஓசூரில் இருந்து திருப்பத்தூருக்கு தினமும் மினி லாரிகளில் வருகிறது. காதலர்கள் தினம் என்பதால். ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் (பெங்களூர் ரோஸ்) ரோஜா கட்டு ரூ.150 வரை இருந்தது. தற்போது ஒரு கட்டு ரூ.300-க்கு கிடைக்கிறது. இதில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் உள்ளது. மேலும் ரோஜா பூ கட்டுவாங்கி விற்பவர்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை சேர்த்து விற்பனை செய்கிறார்கள். வரும் நாட்களில் ரோஜா விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்


Next Story