ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு


ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
x

வள்ளியூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் சென்ட்ரல் ‌ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்க தலைவர் முத்து சுபாஷ் தலைமை தாங்கினார். செல்லப்பா இறைவணக்கம் வாசித்தார். முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.

புதிய தலைவராக மேக்ரோ தொழில்நுட்ப கல்லூரி நிறுவனர் பொன்.தங்கதுரை, செயலாளராக சுதிர் கந்தன், துணைத்தலைவராக இல.சுப்பிரமணியன், பொருளாளராக தினேஷ் கண்ணா மற்றும் நிர்வாகிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருங்கால ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக புதிய தலைவரை இல‌.சுப்பிரமணியனும், சிறப்பு விருந்தினரை வலங்கைப்புலியும் அறிமுகம் செய்து வைத்தனர்.

விழாவில் நலத்திட்ட உதவிகளாக கழுவூர் டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளிக்கு ஆயிரம் மூட்டை சிமெண்டு, ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கணினி மற்றும் கணினி டேபிள், பெண்ணுக்கு தையல் எந்திரம், 2 முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, சி.எம்.எஸ் மகளிர் தங்கும் விடுதிக்கு கிரைண்டர், தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2 ஆட்டுக்குட்டிகள், மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு பண உதவி வழங்கப்பட்டது. முன்னாள் செயலர் ஹரிஸ் முந்தைய ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். உதவி ஆளுநர், பட்டயத்தலைவர் தங்கதுரை, இன்னர் வீல் கிளப் தலைவர் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

விழாவில் பல்வேறு ஊர்களில் உள்ள ரோட்டரி கிளப் நண்பர்கள், வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், சிவந்தகரங்கள் சிதம்பரகுமார் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ‌விழா நிகழ்ச்சிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, இல.சுப்பிரமணியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். செயலர் சுதிர் கந்தன் நன்றி கூறினார்.


Next Story