ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
அரக்கோணம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் துளசியம்மாள் அரங்கத்தில் நடைபெற்றது. 48-வது ரோட்டரி சங்க தலைவராக கே.சதீஷ், செயலாளராக ஆர்.பி.ராஜா, பொருளாளராக எம்.எஸ்.மான்மல் ஆகியோர் பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க ஆளுநர் ஜே.கே.என்.பழனி கலந்து கொண்டு புதிய தலைவர், செயலளருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பத்மநாபனுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாடல் பாசுரை செய்தமைக்காக அவருக்கு சைக்கிள் பரிசளித்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க துணை ஆளுநர் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் பி.இளங்கோ, பொங்கல் விழா சேர்மன் டி.எஸ்.ரவிகுமார், மெம்பர் ஷிப்-சேர்மன் எம்.எஸ் குணசீலன், கிளப் ஆலோசகர்கள் ஜி.மணி, சந்துரு, நிர்வாகிகள் டாக்டர் பன்னீர்செல்வம், டி.கே.என்.கமலகண்ணன், சிவசுப்பிரமணிய ராஜா, எம்.சரவணன், வெங்கட்ரமணன், கேபி.கே.பிரபாகரன், பி.ஆர்.முரளி, பி.ரவிகுமார், வி.எம்.முனிவேலன் மணிகண்டன் ஜெயபாபு ரங்கசாமி, வி.ஏ.ஓ. எஸ்.வெங்கடேசன், மனோகர் பிரபு, எம்.பாலமுருகன், டாக்டர் அசோக் குமார், டி.லட்சுமிபதி, எம்.முரளி, சாய் ஸ்ரீ கிரிகெட் அகாடமி சிவகுமார், நரேந்திர குமார், தேவன் டிஜிட்டல் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.