அழுகிய நிலையில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

ரெயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). இவரது மனைவி முத்துமாரி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகள் விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜேந்திரன் சிவகாசியில் உள்ள பிரபல அச்சக உரிமையாளர் வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராஜேந்திரன் அவரது மனைவி முத்துமாரியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் ராஜேந்திரனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அருகே விஷ பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் அருகே இருந்த உடைகளை வைத்து இறந்து கிடந்த நபர் ராஜேந்திரன் என போலீசார் உறுதி செய்தனர்.



Next Story