வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

ஆரணியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கல்வி மாவட்டம் சார்பாக தமிழ் மன்றம் மற்றும் தமிழ் கலையிலும், கல்வியிலும் புதுமை புகுத்தும் புதிய முயற்சி திட்ட தொடக்க விழா ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் கோ.சந்தோஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்று பேசினார்.

பள்ளி மாணவர்களின் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சங்ககால தலைவர்களின் உருவம் போல வேடமிட்டு நடித்து காட்டி பேசினர்.

தொடர்ந்து ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் வட்ட அளவிலான மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கமலக்கண்ணன், சாவித்திரி, அருணகிரி, குணசேகரன், ரங்கநாதன், தரணி, ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story