குப்பை குவியல்


குப்பை குவியல்
x

குப்பை குவியல்

திருப்பூர்

விபத்து ஏற்படும் அபாயம்

காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரம். இங்கு மூன்று ரோடு பிரிவு அருகே ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் ஒரு அடி ஆழத்துக்கு பெரிய குழி உண்டாகியுள்ளது. இந்த குழியால் விபத்து ஏற்படும் அபாயம்உள்ளது. எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும்.

தூர்வாரப்படாத சாக்கடை வாய்க்கால்

பழவஞ்சிபாளையம் வீரபாண்டி போலீஸ் நிலையம் அருகில் சாக்கடை கால்வாய் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.


ருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக பஸ் நிறுத்தம் அருகிலும், அவினாசிலிங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகிலும் விபத்தை உருவாக்கிடும் நிலையில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் இருந்து விபத்து நிகழாமல் இருக்க தற்காப்பு இரும்பு டிவைடர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த இரும்பு டிவைடர்களும் சேதாரமாகி உடைந்து ஆங்காங்கே கிடக்கின்றது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


--

குப்பை குவியல்

திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டு ஸ்ரீநகர் 4-வது வீதியில் குடியிருக்கும் வீட்டை சுற்றி குப்ைப கொட்டுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் குப்பைகளை அள்ள இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வீடுகளை சுற்றி குப்பை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திருப்பூர்


Related Tags :
Next Story