ஆரல்வாய்மொழியில் ரவுடி படுகொலை


ஆரல்வாய்மொழியில் ரவுடி படுகொலை
x

ஆரல்வாய்மொழியில் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரவுடி

ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை அடுத்த அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). இவர் மீது தோவாளை இரட்டைக்கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ஆரல்வாய்மொழி ரவுடி பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று ்இரவு 11 மணி அளவில் மாதவலாயம் அருகே புளியன்விளை பகுதியில் உள்ள ஓடை அருகில் நண்பர் ஒருவருடன் அமர்ந்து ராஜ்குமார் மது அருந்தி கொண்டு இருந்தார்.

படுகொலை

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அந்த கும்பல் ராஜ்குமாரை பார்த்ததும் அவரை நோக்கி ஓடி வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டி, கத்தியாலும் குத்தினார்கள்.

இதில் வயிறு, நெஞ்சு பகுதி, முதுகு உள்பட உடலில் பல்வேறு பகுதிகளிலும் அரிவாள் வெட்டும், கத்திக்குத்தும் விழுந்தது. இதனால் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அருகில் அமர்ந்து இருந்த நண்பர் ராஜ்குமாரின் வீட்டுக்கு ஓடி சென்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரவுடி படுகொலை சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து ராஜ்குமார் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ரவுடி ராஜ்குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 5 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.


Next Story