அரச- வேம்பு மரங்களுக்கு திருமணம்
வாய்மேடு அருகே உலக நன்மை வேண்டி அரச- வேம்பு மரங்களுக்கு திருமணம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது. இதை முன்னிட்டு அரச, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் அரச மரத்தை ஆணாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து மாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமண நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு, வேம்பு திருமணத்தில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறும் என்பதால் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story