நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி


நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிராமிய திருவிழா நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். மேலும் அங்கு நடந்த பாரம்பரிய விளையாட்டு போட்டியில் சிறுவர்களோடு அன்புமணி ராமதாஸ் பம்பரம் விட்டு விளையாடினார். முன்னதாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அவரை பாட்டாளி மக்கள் கட்சியினர் குதிரை வண்டியில் பாரம்பரிய முறைப்படி அழைத்து வந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று கவர்னர் தெரிவித்து இருக்கிறார். இது அவரது வேலை இல்லை. கவர்னருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை.

விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிச்சயம் வரும். அதை சமாளிக்க தேவையான நடவடிக்கையை அரசாங்கம் இப்போதே செய்ய தொடங்க வேண்டும். நீர்மேலாண்மை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story