கேட்பாரற்று கிடந்த ரூ.1 லட்சம் போலீசில் ஒப்படைப்பு


கேட்பாரற்று கிடந்த ரூ.1 லட்சம் போலீசில் ஒப்படைப்பு
x

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 லட்சம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கக்கன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது பாபநாசம் பஸ் வந்து செல்லும் இடத்தில் கீழே ஒரு பை கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கேட்பாரற்று கிடந்த அந்த பணத்தை சண்முகசுந்தரம் புதிய பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த பணம் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. யாராவது பணம் காணவில்லை என புகார்கள் கொடுத்து உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் குடல் வால்வு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருடன் அவரது தாயார் முத்துலட்சுமி (வயது 65) என்பவர் இருந்து வருகிறார். நேற்று மதியம் ஆஸ்பத்திரி வளாகத்தில் முத்துலட்சுமி தனது பணம் ரூ.5 ஆயிரத்தை தவறவிட்டார். ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரூ.5 ஆயிரத்தை மீட்டு, முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தார்.


Next Story