கட்டிட வரைபட அலுவலகத்தில் ரூ.1 லட்சம், ஒரு கிலோ வெள்ளிக்கட்டிகள் திருட்டு


கட்டிட வரைபட அலுவலகத்தில் ரூ.1 லட்சம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிக்கட்டிகள் திருடுபோனது

மதுரை


சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 31). இவர் மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவில் கட்டிட வரைபட அலுவலகம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அலுவலகத்தை மூடி விட்டு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது அதன் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சம், ஒரு கிலோ வெள்ளிக்கட்டிகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story