வியாபாரியிடம் ரூ.1.05 கோடி மோசடி: பணத்தைக் கொடுக்காமல் தமிழகத்திற்கு தப்பி வந்த நபர் - துரத்தி வந்த டெல்லி போலீசார்


வியாபாரியிடம் ரூ.1.05 கோடி மோசடி: பணத்தைக் கொடுக்காமல் தமிழகத்திற்கு தப்பி வந்த நபர் - துரத்தி வந்த டெல்லி போலீசார்
x

டெல்லியில் வியாபாரியிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்த நபரை கைது செய்த டெல்லி போலீசார் வெள்ளகோவில் வந்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். துணி வியாபாரம் செய்து வந்த நிலையில், டெல்லியை சேர்ந்த புருஷோத்தமன் ஷர்மா என்பவரிடம், ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பணத்திற்கு துணி வாங்கி, பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி எஸ்.ஐ., விவேக்குமார் தலைமையில் நான்கு போலீசார் வெள்ளகோவில் வந்தனர். பின்பு வெள்ளகோவில் போலீசார் உதவியுடன் சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்த போது சரவணன் தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து, சரவணன் வீட்டில் தேடப்படும் குற்றவாளி என டெல்லி போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


Next Story