ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
ஊட்டி
ஊட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒரு சிலருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை கொண்டு வந்து விடுகின்றனர். இதை தடுப்பதற்காக ஊட்டி நகராட்சியில் நகராட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஹில்பங்க், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும் மொத்தமாக ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.