சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.16 ஆயிரம்;முதியவர் மீட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.16 ஆயிரம்;முதியவர் மீட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்
x

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.16 ஆயிரத்தை முதியவர் மீட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில், ஜூன்.7-

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.16 ஆயிரத்தை முதியவர் மீட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்தார்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 71). இவர் நேற்று காலை மணிமேடை பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்று ஒரு பர்ஸ் கிடந்தது. அதனை எடுத்து பார்த்த சுப்பிரமணியம், அதில் ரூ.16,450 இருந்தது. இந்த பர்ஸ் யாருடையது என அங்கிருந்தவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தங்களது பர்ஸ் இல்லை என தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்து, இதுபற்றி விவரங்களை தெரிவித்து பணத்தை அவரிடம் ஒப்படைத்தார். முதியவரின் நேர்மையை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார். மேலும் இந்த பணம் யாருடையது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story