ரூ.2 ஆயிரம் கோடி போதைபொருட்கள் அழிப்பு


ரூ.2 ஆயிரம் கோடி போதைபொருட்கள் அழிப்பு
x

சுங்கத்துறை மூலம் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி போதைபொருட்கள் அழிக்கப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி,

சுங்கத்துறை மூலம் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி போதைபொருட்கள் அழிக்கப்பட்டன.

ேபாதைபொருட்கள்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம், ஏ.முக்குளம் அருகே உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையில் போதை பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு சுங்கத்துறை சார்பில் போதை பொருட்களை எரியூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மதுரை சின்னப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுங்கத்துறை சார்பில் கைப்பற்ற 330 கிலோ போதை பொருள்கள் எரிக்கப்பட்டது. இதன்மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.

நட்சத்திர வாரம்

இதுகுறித்து சுங்கத்துறை முதன்மை ஆணையாளர் உமாசங்கர் கூறியதாவது:-

இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹாத்சவ் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கம் ஒவ்வொரு துறையின் மூலம் நட்சத்திர வாரமாக கொண்டாடி வருகிறது. இதில் 6 முதல் 12 வாரம் வரை மத்திய நிதியமைச்சகமும் - வர்த்தகத்துறையும் கொண்டாடி வருகிறது.

இதில் போதை பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பிடிப்பட்ட போதை பொருள் 42 ஆயிரம் கிலோ ஆங்காங்கே அழிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுங்கத்துறை மூலம் கைப்பற்றப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை ெபாருட்களை நரிக்குடி அருகே உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவு ஆலையில் வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார். திருச்சி சுங்கத்துறை ஆணையாளர் அணில், துணை ஆணையாளர் திலீபன், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை துணை ஆணையாளர் திருநாவுக்கரசு, திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மதுரை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story